• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பொங்கி வரும் நுரையால் அவதியில் வாகன ஓட்டிகள்.., கண்டு கொள்ளாத மதுரை மாநகராட்சி…

ByKalamegam Viswanathan

Nov 9, 2023

மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர்கள் மழை நீரோடு கலந்து அயன்பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுவதால் பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீர்கள் கண்மாயில் கலப்பதால் அயல் பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதால் மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.

மேலும் நுரை மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓடிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று வெள்ளைக்கல் நுரை மலை போல் எழுந்து விமான நிலையம் செல்லும் சாலை முழுவதும் பரந்து வாகன ஓட்டிகள் இடையே மிகப் பெரும் அச்சத்தை ஏற்பட்டு வருகிறது.

அவனியாபுரம் இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் அவ்வழியாக கடந்து செல்லும் இந்த நிலையில் நுரைகள் மலை போல் எழுந்து சாலைகள் பறந்து விழுவதால் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய விபத்தை சந்திக்க உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் வெள்ளைக்கல் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியும் இன்னமும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மலை போல் நுரை சாலையை சென்றடைந்து விமான நிலையத்திலிருந்து அவனியாபுரம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்த உள்ளது. இதை தமிழக அரசு உடனடியாக கவனத்தைக் கொண்டு இதை சரி செய்து இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வெள்ளை கல்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று மழை போல் நின்ற முறையில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நின்று செல்பி எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.