• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சென்னையில் நாளை மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை..!

Byவிஷா

Nov 8, 2023

சென்னையில் நாளை காலை 9.30மணிக்கு மக்களவைத் தேர்தல் குறித்து, தென்மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
அடுத்தாண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்அந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மக்களவை தேர்தலை தொடர்ந்து சென்னையில் நாளை காலை 09:30 மணிக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
சத்யபிரத சா{ஹ உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். மக்களவை தேர்த்தலுக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்ட உள்ளது. மேலும் அந்தமான், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். தெலுங்கானாவில் தற்போது தேர்தல் நடைபெற்று வருவதால் அந்த மாநில அதிகாரிகள் யாரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
மக்களவை தேர்தலை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வட பகுதியில் உள்ள மாநிலங்களும், கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களும், மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களும் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தனது ஆலோசனையை தென் பகுதியில் இருந்து தொடங்கியள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.