• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்…

ByP.Thangapandi

Nov 7, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு ஊழியர்சங்க அலுவலகத்தில் உசிலம்பட்டி வட்டார அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் தலைவர் ஜோதிபாசு, செயலாளர் அழகுராஜா தலைமையிலும் கௌரவத்தலைவர்கள் பாலாஜி மற்றும் ஆண்டவர் முன்னிலையில் நடைபெற்றது.,
இதில் அனைத்து அச்சகங்களிலும் ஒரே விலை பட்டியல் வைப்பது குறித்தும், அச்சகத்தில் பணிபுரியும் நலிவுற்ற பணியாளர்களின் குடும்பத்திற்கு மருத்துவ வசதி மற்றும் கல்வி உதவிகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டி பகுதிகளில் நடைபெறும் மருத்துவம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது., இதில் அச்சக உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.