• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி மீது சரக்குலாரி ஏறி விபத்து – தலைகவசம் அணிந்திருந்தும் தலை நசுங்கி உயிரிழந்த சோகம்…

ByP.Thangapandi

Nov 7, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கருப்பு கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியிலிருந்து விருவீடு நோக்கி சென்ற விருவீடைச் சேர்ந்த அய்யப்பன் என்ற கட்டிட தொழிலாளி, சரக்கு லாரியை முந்த முயன்ற போது எதிரே கார் வர கார் மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்தவர் மீது அவர் முந்த முயன்ற சரக்கு லாரி அய்யப்பனின் தலை பகுதியில் ஏறியது., இதில் தலைக்கவசம் அணிந்திருந்த போதும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் அய்யப்பனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கேரள பதிவெண் கொண்ட லாரி குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,