• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் ஆயுத பூஜையை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..!

Byஜெ.துரை

Nov 4, 2023
சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆயுத பூஜையை முன்னிட்டு, கோயம்பேடு வணிக வளாகத்தில்  சுமார் 1000 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அபே, ஷேர் ஆட்டோ, லோடு ஆட்டோ, வேன், மேக்ஸி கேப், டூரிஸ்ட் டாக்ஸி போன்ற வாகனங்களுக்கு பூஜையும் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளாராக சூளைமேடு குற்றபிரிவு ஆய்வாளர் N.கர்ணன்  கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தானத்திலயே சிறந்த தானம் அன்னதானம் இந்த அன்னத்தை வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி என கூறினார். மேலும் இந் நிகழ்வில் இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட தலைவர் டீ.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.எல். கண்ணன், மற்றும் சுமை பணி பொதுச் செயலாளர் நீலமேகம்,மாவட்ட தலைவர் ஹரி கிருஷ்ணன், செயலாளர் மு. சுந்தர ராமன், மற்றும் செந்தில், இராஜந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனார்.