• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்…

BySeenu

Nov 2, 2023

மின் கட்டண உயர்வை திரும்ப பெற அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு
அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க இது வரை 6 கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
நிலைகட்டணம் மற்றும் பீக்ஹவர் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த அவர்,
எங்களின் தொழில் 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனவும், தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர்கள், எங்களின் வலியை அரசு புரிந்து கொண்டு செவி சாய்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 7-ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டமாக வரும் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் எனவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாக இதை மேற்கொள்ள உள்ளோம் எனவும் தெரிவித்தனர். கோவையை பொறுத்தவரை 10 சட்டமன்ற உறுப்பினர், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை கோ இண்டியா வளாகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கின்றோம் எனவும், இதில் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அன்றே முடிவு செய்யப்படும் எனவும் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.