சிந்தனைத்துளிகள்
ஒற்றுமையாக வாழ்ந்த சகோதரர்கள் சிலரது சூழ்ச்சியால் பிரிய நேரிட்டது. இதனால் சொத்துக்களும் பிரிந்தன. நிலத்தின் நடுவே பள்ளமான வாய்க்காலை வெட்டி அதனையும் பிரித்துக் கொண்டனர். இதனால் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே பல நாட்கள் வாழ்ந்தனர்.
ஒரு சமயம் அவ்வூருக்கு இவர்களைப் பற்றி தெரிந்த தச்சர் ஒருவர் அண்ணனிடம் வேலை கேட்டு வந்தார், அவரிடம் தம்பி முகத்தைப் பார்க்காமல் இருப்பதற்கு மரத்தாலான சுவர் எழுப்பச் சொன்னார். ஆனால், அவரோ இருவரையும் சேர்க்க பாலம் அமைத்தார். இதையறிந்த தம்பி இதுவரை அண்ணனை தவறாக நினைத்து விட்டேனே என வருந்தியபடி பாலத்தில் நடந்தார்.
மீண்டும் இணைத்து வைத்த தச்சரிடம் எங்களுடன் இருங்கள் என வேண்டினர். அதற்கு அவரோ கூலியை வாங்கிக் கொண்டு இது போல பல பாலங்கள் அமைக்க வேண்டியுள்ளது என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார்.






; ?>)
; ?>)
; ?>)
