• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வந்துவிட்டது ஆப்பிளின் புதிய ஐமேக் கணிணி..!

Byவிஷா

Nov 2, 2023

தொழில்நுட்ப ஜாம்பவான்களின் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக புதிய ஐமேக் கணினியை வெளியிட்டுள்ளது. புதிய எம்.3 சிப் கொண்ட மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எம்.3 சிப்புடன் கூடிய ஐமேக் ஆனது முந்தைய தலைமுறை எம்.1 சிப்பை விட இரண்டு மடங்கு வேகமாக உள்ளது. இந்தியாவில் 8-கோர் சிபியு கொண்ட ஐமேக் கணினியின் இன் விலை ரூ. 134900 இல் தொடங்குகிறது. கல்விப் பிரிவில், ரூ.129900-க்கு கிடைக்கும். இது பச்சை, இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் சில்வர் வண்ண வகைகளில் கிடைக்கிறது.
இதன் மற்ற முக்கிய அம்சங்களில் 8-கோர் சிபியு, 8ஜி.பி ஒருங்கிணைந்த நினைவகம், 256ஜி.பி எஸ்.எஸ்.டி, இரண்டு தண்டர்போல்ட் போர்ட்கள், ஒரு மேஜிக் கீபோர்டு மற்றும் ஒரு மேஜிக் மவுஸ் ஆகியவை அடங்கும்.
மறுபுறம், 10-கோர் சிபியு உடன் ஐமேக் ரூ.154,900-ல் தொடங்குகிறது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் இது வெள்ளி வண்ணங்களில் கிடைக்கிறது. இது 11.3 மில்லியன் பிக்சல்கள் மற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்கள் கொண்ட மேம்பட்ட 4.5கே ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
புதிய ஐமேக்-ன் மற்ற அம்சங்களில் வேகமான வயர்லெஸ் இணைப்பு மற்றும் iPhழநெ உடன் தடையற்ற அனுபவம் ஆகியவை அடங்கும். இது சிறந்த கேமரா, ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்குகளை மேகோஸ் சோனோமாவுடன் இணைக்கிறது. புதிய ஐமேக் கணினி குடும்பங்கள் முதல் சிறு வணிகங்கள், படைப்பாளிகள், மாணவர்கள் மற்றும் விளையாட்டாளர்கள் வரை அனைவருக்கும் சரியான கேஜெட்டாகும். கேஜெட்டை ஆர்டர் செய்து சொந்தமாக்குவதற்கான வாய்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தியாவில் நவம்பர் 7-ஆம் தேதி முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.