• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அரசு அலுவலக செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள, மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு.., பங்கேற்ற பள்ளி மாணவர்கள்…

ByKalamegam Viswanathan

Nov 1, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பூமாரி ஆகியோர் சத்திரப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துணை தலைமை ஆசிரியர் முத்து கிருஷ்ணன் தலைமையில் வந்த 25 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் யூனியன் அலுவலகம் எவ்வாறு செயல்படுகிறது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த யூனியன் அலுவலகம் மூலம் கிராம மக்கள் எவ்வாறு பயன்படுகின்றனர் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் காவல் நிலையம் கோர்ட் வங்கி செயல்பாடுகள் குறித்தும் மாணவர்கள் கேட்டறிந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும்பொழுது அரசு அலுவலகங்கள் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள நல்லவாய்ப்பாக இது அமைந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.