• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பசும்பொன் குருபூஜையில் கலந்து கொள்ள வந்த ஈபிஎஸ் மீதான தாக்குதல் நடந்து இருக்க கூடாது மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம்…

ByKalamegam Viswanathan

Oct 31, 2023

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில் மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது. இரு தரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும் – ஓபிஎஸ் பேட்டி

பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்க கூடாது.

மதுரையில் இருந்து சென்னை செல்ல முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு:

காவிரி ஆற்று படுகை ஒரு பன் மாநில ஆறாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு ஆறு இரண்டு, மூன்று மாநிலங்கள் வழியாக ஓடுகின்ற போது, அந்த மூன்று மாநிலங்களுக்கும் உரிமை இருக்கிறது என்றுதான் சொல்கிறது.

அதன்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு அதற்கான அரசாணை பெற்று தந்தவர் ஜெயலலிதா.

அந்த தீர்ப்பின்படி தான் காவிரி நதிநீர் ஆணையம், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை தற்போது காவிரி ஒழுங்காற்று குழுமம் என்கிற பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக காவிரி நதியின் நீரை எவ்வாறு பங்கிடுவது, வறட்சி ஏற்பட்டால் அதை எப்படி பங்கிடுவது என்பதெல்லாம் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலிருந்து ஒரு அரசு மீறுவது என்பது இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக தான் அர்த்தம். அவர்கள் எந்த வித உயர்ந்த பதவியில் இருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்தை யாரும் மீறக் கூடாது என்பதுதான் நம்முடைய சட்டம்.

அந்த சட்டத்தை மீறுபவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக தான் அர்த்தம். இதில் தமிழ்நாடு அரசு உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை.

தமிழக மீனவர்கள் கைது,

தொடர் கதையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வது வேடிக்கையாக இருக்கிறது, வாடிக்கையாக இருக்கிறது. இதனால் தமிழகத்தின் மீனவர்கள் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண தமிழக முதல்வர் மற்றும் பாரத பிரதமரும் இலங்கை அரசை தொடர்பு கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

ஆளுநர் மீது தமிழக அரசு வழக்கு தொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு,

ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டம் இதில் மக்களுடைய திட்டங்கள், மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது.

இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும். புதிய கட்சி தொடங்குவதற்காக தேவரிடம் வேண்டிக் கொண்டீர்களா என்ற கேள்விக்கு: கனவு காண்பதற்கு நீங்கள் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்வது.

பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்த கேள்விக்கு,

நேற்று முன்தினமே நான் சமூக வலைதளங்கள் மூலமாக பசும்பொன் என்கிற புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித தொந்தரவு துயரத்தை கொடுக்கக் கூடாது என்பதை தெரிவித்து இருக்கிறேன். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது.

பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றோர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்துக்காக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கூறியது குறித்த கேள்விக்கு,

அது தீர்வாகாது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு கவர்னர் மாளிகை மீது குண்டு வீசுவது தீர்வாகாது அது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார்.