• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போக்சோ வழக்கு கைதி பணியின் போது தப்பி ஓட்டம்…

BySeenu

Oct 29, 2023

கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நன்னடத்தை கைதிகளை போலீசார் பாதுகாப்புடன் பணி அமர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஷிப்ட்டை மாற்றுவதற்காக சிறை காவலர்கள் பணியில் இருந்தவர்களின் எண்ணிக்கையை எண்ணி பார்க்கும் பொழுது ஒரு கைதி காணாமல் போயுள்ளார்.

இது குறித்து சக கைதிகளிடம் கேட்கையில் காலை சுமார் 5:30 மணியளவில் இருந்து அவரை பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து காணாமல் போனவர் கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதான விஜய் ரத்தினம் என்பது தெரிய வர, இது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.