• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்றைய இளைஞர்கள் குறும்படங்கள் இயக்க ஆர்வம்..,

BySeenu

Oct 28, 2023

குறும்படங்கள் இயக்குவதில் இன்றைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாக பிரபல எடிட்டரும், தேசிய விருது பெற்ற இயக்குனர் எடிட்டர் லெனின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பிரபல எடிட்டரும்,இயக்குனருமான பி.லெனின் இயக்கிய ஆவணப் படமான சிற்பிகளின் சிற்பங்கள் சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதை டில்லியில் நடைபெற்ற விழாவில் லெனின் பெற்று கொண்டார்.இந்நிலையில் கோவை திரும்பிய அவர்,தேசிய விருது பெற்ற,ஆவணபடமான சிற்பிகளின் சிற்பங்களை எடுக்க அவரிடன் பணிபுரிந்த ஓளிப்பதிவாளர்,உள்ளட்ட தொழில் நுட்ப கலைஞர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர்,கோவையில் உள்ள கிளஸ்டர் மீடியா கல்லூரி சிறந்து செயல்பட்டு வருவதை சுட்டிகாட்டிய அவர், தேசிய விருது பெற்ற ஆவண படம் எடுக்க கிளஸ்டர் மீடியா கல்லூரி மாணவர்கள் அவருடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.தொடர்ந்து அவர்,தமக்கு கிடைத்த தேசிய விருது சான்றிதழை கிளஸ்டர் மீடியா கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அரவிந்தனிடம் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்…கல்வி மற்றும் அதை கற்று கொடுக்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக உருவாகி தேசிய விருது சிற்பிகளின் சிற்பங்கள் ஆவண படம் போல இன்னும் பல ஆவணபடங்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என அவர் கூறினார்.