• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கொளத்தூர் தொகுதியில்.., கால்பந்து மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

Byவிஷா

Oct 21, 2023
சென்னை கொளத்தூர் பகுதியினை சேர்ந்த பல்லவன் சாலையில் செயற்கை புல் தரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 86 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மைதானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திரு.வி.க.நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலையும் முதல்வர் நேற்று(அக்.,20) திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த மைதானத்திற்கு கடந்தாண்டு மே மாதம் 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.