• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது..!

ByKalamegam Viswanathan

Oct 17, 2023

இராஜபாளையம் அருகே போலீசார் சோதனையின் போது கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது சேத்தூர் ஊரக காவல் நிலையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கன்னியராஜ் (வயது30 )என்ற வாலிபரை சோதனை செய்து பார்த்தபோது 50 கிராம் கஞ்சா வைத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பேசி வந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வாளர் அனந்தகுமார் தலைமையில் போலீசார் சோதனை செய்தபோது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கன்னியராஜ் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற குற்றங்கள் ஈடுபட்டால் குண்டாஸ் சட்டம் போடப்படும் என காவல்துறை எச்சரித்தனர்.
கன்னியராஜ்க்கு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தீவிர விசாரணை செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.