• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

12 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா..!

ByKalamegam Viswanathan

Oct 12, 2023
கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள மலையடி கருப்பசாமி அய்யனார் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குதிரை எடுப்பு திருவிழா 12 ஆண்டுகளுக்குப் பின் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழக்குயில்குடி மலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. புரட்டாசி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக குதிரை எடுப்பு திருவிழா நடைபெறும். மழைவளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி கிராமத்து மக்கள் குதிரை எடுப்பு திருவிழா நடத்துகின்றனர். இந்நிலையில் கிழக்குயில் குடி மலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விளாச்சேரி கிராமத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி ஐந்தடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட மண் குதிரைகள் தயார் செய்யப்பட்டன. அவற்றை  விளாச்சேரி கிராமத்தில் இருந்து 21  குதிரைகள் அலங்கரிக்கப்பட்டு மூன்று தேவர் வகையறாவான கீழக்குயில்குடி கிராமத்தினர் சம்பிரதாய முறைப்படி பூஜைகள் முடித்து 21 குதிரைகளும் தட்டானுர்  வழியாக கீழக்குயில்குடி கிராமத்தில் கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் கருப்பு கோயில் எடுத்துச்சென்று நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  கீழக்குயில்குடி மலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா 12  ஆண்டுகள் கழித்து திருவிழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி கீழக்குயில் குடி கிராமத்தினர் குதிரை எடுப்பு திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடினர்.