• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் புதிய பிரச்னை..!

Byவிஷா

Oct 10, 2023

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு அரசு வேலையில் இருப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக வந்த குறுஞ்செய்தியால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி இந்த மாதத்திற்கான பணம் வங்கி கணக்கில் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது ஆயிரம் ரூபாய் வேண்டி விண்ணப்பித்த புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி சித்ரா என்பவருக்கு அரசு வேலையில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு இணைய கோளாறு காரணமாக இவ்வாறு பலருக்கும் மெசேஜ் வந்துள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.