• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

Byவிஷா

Oct 9, 2023

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக, இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்த நிலையில், ஏற்கனவே இருக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதே நிலை தொடரும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை மாற்றம் தொடர்பாக இப்போது ஏதும் கோரிக்கை இல்லை என தெரிவித்தார். ஒபிஎஸ்க்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி வருகிறது எனவும் அப்பாவு தெரிவித்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி அலுவலக அறையில் கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டப்பேரவை சபாநாயகருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.