• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வேளாண் இயந்திரங்களின் சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்..!

Byகுமார்

Oct 4, 2023
தமிழ்நாடு மாநில தொடக்க   கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், மதுரைக்கிளையின் சார்பில் வேளாண் இயந்திரங்களின் சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. 
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தை முன்பு, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில கௌரவ செயலாளர் ஆசிரியதேவன் தலைமையில் கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதை கண்டித்து  கடந்த சில தினங்களுக்கு முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டுறவு சங்கம் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் வேளாண்மை இயந்திரகளின் சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது
இப்போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் கணேசன், பொருளாளர் பாரூக் அலி,  உள்பட 170 சங்கங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட்ட 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.