• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 4, 2023

சிந்தனைத்துளிகள்

சாதனையின் ஊற்றுக்கண்

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி, கடின உழைப்பு, நுண்ணறிவு, தன்னம்பிக்கை இவை அனைத்தும் சேர்ந்துதானே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும்.

சாதிப்பதற்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

If not me, then who?
If not now, then when?

சாதனையின் ஊற்றுக்கண் – இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே!

“இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.

துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

தீப்பந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும்.

“படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு…