• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அதிவேக இணையதள சேவையில் 72 இடங்கள் முன்னேறிய இந்தியா..!

Byவிஷா

Oct 3, 2023
அதிகவேக இணைய சேவை வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் 72 இடங்கள் முன்னேறி 47வது இடத்தை அடைந்திருக்கிறது இந்தியா. 
இந்தியாவில் 5ஜி சேவைகள் வழங்கத் தொடங்கப்பட்டதையடுத்து இந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது இந்தியா. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதமே (சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு) இந்தியாவில் 5ஜி சேவைகளை அளிக்கத் தொடங்கின.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோவும், ஏர்டெல்லும். இந்தியாவின் சராசரி இணைய வேகமானது, கடந்தாண்டு 13.87 Mbps ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 50.21 Mbps ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லின் நாடு தழுவிய 5ஜி சேவைக் கட்டுமானமே காரணம்.
இந்தியாவில் ஜம்மூ காஷ்மீரிலேயே சராசரி இணைய வேகம் மிக அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150.96ஆடிpள சராசரி வேகத்தைக் கொண்டிருக்கிறது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம். இந்தியாவில் 4ஜி சேவையின் பதிவிறக்க வேகத்தை விட 5ஜி சேவையின் வேகமானது மிக அதிகமாக 2,003சதவீதம் அதிகரித்திருக்கிறது. சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது 14.97 Mbps ஆக இருந்த நிலையில், 5ஜி சேவையால் அது 316.24 Mbps அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இந்த அதிகவேக 5ஜி சேவையானது, பிராண்டுபேண்டு வசதி கொடுக்க முடியாத தொலைதூர இடங்களிலும் வயர்லெஸ்ஸாக அதிவேக இணைய சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வழி வகுத்திருக்கின்றன.