• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு..!

Byகிஷோர்

Oct 23, 2021

ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்டவைகள் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் அன்று திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றுவதற்கு கொண்டு செல்லப்படும். இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் உகந்தனுப்பிய பட்டு ஆண்டாளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.


இந்தப் பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் நேற்று இரவு நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஸ்ரீரங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சேவா காலம், தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.