• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில், உள்ளூர் குளிர்பானங்களை ஆதரித்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை எதிர்த்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்…

Byகுமார்

Sep 22, 2023

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் உள்ளூர் குளிர்பானங்களை ஆதரித்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை எதிர்த்தும்
விழிப்புணர்வு பிரச்சாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரைமாவட்டம் சார்பாக சுதேசி வணிகத்தை ஆதரிப்போம் என்று மாநிலத்தலைவர் முத்துக்குமார் அவர்கள் ஆணைக்கிணங்க மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத்தலைவர் சூசைஅந்தோணி
மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு மாநிலச் செயலாளர் குட்டி(என்ற) அந்தோணிராஜ், சபரிச்செல்வம் மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார் பொருளாளர் தேனப்பன் துணைத் தலைவர்கள் கரண்சிங் வாசுதேவன். இளைஞர் அணி செயலாளர் ஆதிபிரகாஷ் வழக்கறிஞர் அணி கண்ணன்.மகளிர் அணியினர் பாக்கியலெட்சுமி. ராஜம்மாள் மற்றும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். அந்நியகுளிர்பானங்களை கீழே கொட்டி நமது உள்ளூர் குளிர்பானங்களை பொதுமக்களுக்கு கொடுத்து சுதேசி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை வடக்குபகுதி தலைவர் சாமுவேல்(என்ற)சரவணன் செய்திருந்தார் குளிர்பானங்களை ஆதரித்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை எதிர்த்தும்
விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உள்ளூர் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை கிழக்கு பகுதி, விரகனூர் பகுதி, மதுரை தெற்கு பகுதி, மதுரை மேற்கு பகுதி, மதுரை மத்திய பகுதி, மதுரை வடக்கு பகுதி, திருப்பரங்குன்றம் பகுதி, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.