• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் 150 க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்த, தேமுதிக முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார்…

Byகுமார்

Aug 28, 2023

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் முன்னிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சியம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்துல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத்தலைவர்கள் கவிஞர் மணிகண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150 க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன், அதிமுகவில் இணைந்தார். இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்டக்கழக செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச்செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் வேடமிட்டு வந்த எம்ஜிஆர் ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் வந்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.