• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி – உறுதியான தகவல் …..

ByKalamegam Viswanathan

Aug 26, 2023

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் – புனலூர் விரைவு ரயிலில் இருந்து கழட்டி டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 17 ந் தேதி லக்னோவில் இருந்து IRCTC ஆன்மீக சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு அதிகாலை 5.15 மணி அளவில் வந்தடைந்தனர்.

பெட்டியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர்.

பயணி ஒருவர், பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்து டீ தயாரிக்க, தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீயைக் கண்ட வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் கீழே இறங்க, அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதில் கோச்சில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகி உள்ளனர்.

இதுவரை 9 சடலங்கள், விரைந்து வந்த மதுரை டவுண் தீயணைப்புத் துறையினரும், அக்கம்பக்கத்து பொது மக்களும் தீயை அணைத்து, எரிந்த நிலையில் 9 சடலங்களை மீட்டு உள்ளனர்.

அதில் 5 ஆண்கள், 3 பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் 1.

சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீஸ் & அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் & வருவாய்த் துறையினர், போலீஸ் கமிஷனர் & போலீஸ் துறையினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.