• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோயில் பிரசாத சர்க்கரை பொங்கலில் இரண்டரை இன்ச் ஆணி.., பக்தர்கள் அதிர்ச்சி..!

ByKalamegam Viswanathan

Aug 6, 2023

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தின் தொடரும் அலட்சியப் போக்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த ராமர் என்ற ஆட்டோ ஓட்டுநர் இன்று காலை தாடிக்கொம்பு சௌந்தர்ராஜா பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள பிரசாத ஸ்டாலில் புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவை வாங்கி உள்ளார்.
சர்க்கரை பொங்கலை பிரித்தபோது அவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.
அந்தப் பொங்கலில், 2.5 இன்ச் ஆணி ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட,
ராமர் உடனே பிரசாத ஸ்டாலின் விற்பனையாளரிடம் விளக்கம் கேட்ட போது சரியான விளக்கம் அவர் கூறவில்லை.
இதுகுறித்து, அலுவலகத்திலும் புகார் கூறியுள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, பக்தர்கள் மீது அலட்சியப் போக்கு காட்டி வரும் தாடிக்கொம்பு கோயில் நிர்வாகத்தினர் என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை, கண்காணிக்க மண்டல இணை ஆணையர், உதவி ஆணையாளர், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர், கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பது கடமையாகும்.
ஆனால், பல மாவட்டங்களில், கோயில் இணை ஆணையாளர்கள் கோயில் அலுவலகத்துக்கு வந்து, சம்பள பதிவேடு, ரொக்க குறிபேடு, எம்.டி.ஆர். போன்ற பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, அறநிலையத்துறை ஆணையாளர் உரிய விசாரணை நடத்திய கோரிக்கை விடப்பட்டுள்ளது.