

சாமித்தோப்பு உப்பளத்தின் நடுவே அமைந்துள்ள பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெயில்காத்தஅம்மன் திருக்கோவிலுக்கு மின் இணைப்பு வசதி செய்து தர வேண்டும் என வடக்குதாமரைகுளம் பொதுமக்கள் கழக வர்த்தகர் அணி இணைச்செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் _தாமரைபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று திருக்கோவிலை பராமரிக்கவும், மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசால் ரூபாய் 15லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்காக முதற்கட்டமாக மின் இணைப்பு வசதி செய்து வரும் நிலையில் அங்கு நடைபெற்ற இடம் பணிகளை தாமரைபாரதி, ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ ஆகியோர் நேரில் ஆய்வு செய்ததுடன். அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அதனை விரைந்து முடிக்க, அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்கள்.

