• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தென்னந்தோப்புக்கு தீ வைப்பு…

ByKalamegam Viswanathan

Aug 4, 2023

மதுரை அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், 60க்கும் மேற்பட்ட தென்னை நாவல்
மரங்கள் தீயில் கருகி சேதம். முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம் தீ வைத்தவர்கள் யார் என்று தெரிந்தும், காவல்துறையினர் மறைப்பதாக காவல்துறை மீது சரமாரி குற்றச்சாட்டு. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க குடும்பத்துடன் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பு வைத்து பராமரித்து வருபவர் துரைசிங்கம். இவர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆவார்.
தென்னந்தோப்பில் ஊடுபயிராக நாவல் மரங்கள் மற்றும் பூச்செடிகளையும் வளர்த்து இவரது மனைவி மலர்விழி உடன் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென தென்னந்தோப்பு தீப்பற்றி எரிவதாக அருகில் இருந்தவர்கள் கூறியதை தொடர்ந்து தனது தென்னந்தோப்பு உள்ள இடத்திற்கு விரைந்து சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் துணையுடன்.தீயை அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக புகார் அளிக்க விக்கிரகமங்கலம் காவல் நிலையம் சென்றபோது, மீண்டும் அதே இடத்தில் மறுபடியும் தீ வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், தீயணைப்பு துறையினர் வந்து தீயை அனைத்து சென்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையும் தீப்பிடித்து தென்னை மரங்கள் மற்றும் நாவல் மரங்கள் பூச்செடிகள் உள்ளிட்டவை முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது .

இதன் தொடர்ச்சியாக, தென்னந்தோப்பிற்கு அருகில் உள்ள இவரது தாய் பேச்சியம்மாளின் சமாதியும் தீவைக்கப்பட்டு இருந்தது தெரிந்து மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், நாவல் மரம், வேப்பமரம் பூச்செடிகள் ,தண்ணீர் தேவைக்காக போடப்பட்ட போர் உள்ளிட்டவை தீக்கிரையாகின.
இதனால், கணவன் மனைவி இருவரும் மிகுந்த மனமுடைந்த நிலையில் இருந்தனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சிலர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளனர். உடனே சந்தேகமடைந்த அவர் இது சம்பந்தமாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் தீ வைத்தவர்கள் என சந்தேகப்பட்டு மணிகண்டன், கருப்பு ராஜா, இளையராஜா பிலிப் முருகன் உள்ளிட்ட சிலர் மீது புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி உள்ளனர் .
இதில், கருப்பு ராஜா என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக கூறுகிறார்.
ஆகையால், மிகுந்த விரக்தியில் உள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சுமார் 60க்கும் மேற்பட்ட பச்சை தென்னை மரங்களை தீவைத்து எரித்த நபர்களை கைது செய்யாத காவல்துறையினர் மீது மாவட்ட எஸ்பி உரிய விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் காவல்துறை அதிகாரியான எனக்கே , இந்த நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலை என்னவாகும் எனவும் ஆகையால் ,இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தென்னந்தோப்பிற்கு தீ வைத்தவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஆகையால் ,எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட எஸ்.பி இடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.