• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலைய்யப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்…

Byadmin

Jul 26, 2021

தஞ்சாவூர் அருகே தளவாபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்த ஜெயபால், கடந்த 18-ந் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். பின்னர் கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கிய போது கொலையாளிகள் அங்கு நடமாடிய தெரியவந்தது. அதன்பிறகு தனிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த செந்தில் குமார், குமார், மொட்டை குமார் என்கிற விஜயகுமார், செந்தில்குமார் என்கிற ஜெகதீசன் ஆகிய 4 பேரையும் தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே கைது செய்தனர்.
அவர்களிடம் கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று இரவு மது அருந்துவதற்காக அந்தக் கம்பெனி வாசலுக்கு சென்றபோது ஜெயபால் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரத்தில் கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்ததாகவும், ஆனால் கொலை திருட்டிற்காக நடந்தது போல் நம்ப வைப்பதற்காக அவரது செல்போன் மற்றும் ஸ்கூட்டரை மட்டும் திருடிச்சென்றோம், ஸ்கூட்டரில் பெட்ரோல் இல்லாததால் பாதி வழியில் போட்டுவிட்டு சென்று விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.