• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தொலைந்து போன பணப்பையை 15 நிமிடத்தில் கண்டுபிடித்த, ஏர் இந்தியா நிர்வாகம்..!

ByKalamegam Viswanathan

Aug 3, 2023

மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது ஏர் இந்தியா விமானத்தில், தொலைந்த பணப்பையை 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு, இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரையில் இருந்து தனது சொந்த வேலைக்காக வந்திருந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வராகவன் எர் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

இதன் பின்னர் இயக்குனர் செல்வராகவன் வைத்திருந்த அவருடைய பணப்பை தொலைந்தது. விமானத்தில் தொலைந்த தனது பணப்பையை இயக்குனர் செல்வராகவன் தேடி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து 15 நிமிடத்திற்குள் ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. தங்களுடைய பணப்பை எங்களிடம் இருக்கிறது என்றும் இதை வந்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.

பணப்பையை சேகரித்த செல்வராகவன் ஏர் இந்தியா விமானத்திற்கு நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில்,

” இன்று மதுரையிலிருந்து @airindia விமானத்தில் எனது பணப்பையை தவறவிட்டேன். பதினைந்து நிமிடங்களில் அவர்கள் எனக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளடக்கத்தைப் பற்றி ஒரு அஞ்சல் அனுப்பியுள்ளனர், நான் பணப்பையை சேகரித்தேன். நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். @airindia க்கு மிக்க நன்றி!”என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து உடனடியாக பதில் அளித்துள்ளது,

அன்புள்ள ஐயா, எங்கள் ஊழியர்கள் உங்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் உதவியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் உங்கள் பணப்பையுடன் உங்களை மீண்டும் இணைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக உங்கள் வார்த்தைகளை எங்கள் குழுவிற்கு தெரிவிப்போம் என்று இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி கூறி, ஏர் இந்தியா விமானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த இரு உரையாடல் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.