• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..,

ByKalamegam Viswanathan

Jul 27, 2023

திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நகராட்சி தலைவர் தலைமை ஏற்றார்‌.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.கே.என் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்துகொண்டு, தமிழ்நாடு பள்ளியில் பயிலும் 260 மாணவிகளுக்கு, 260 அரசின் விலையில்லா மிதிவண்டிகளும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 418 மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், திருமங்கலம் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.