• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் முதியவர் பலி..!

ByKalamegam Viswanathan

Jul 11, 2023

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சரவணப் பொய்கையில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சரவண பொய்கையில் காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சரவணப்பையில் இறங்கி குளத்தில் மிதந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவரின் உடலை கைப்பற்றினர். உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், திருப்பரங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர் என கூறப்படுகிறது. அவர் ஊர் பெயர் விலாசம் தெரியாததால் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.