• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆன்லைனில் 51 லட்சத்திற்கு ஏலம் போன மிகச்சிறிய பை..!

Byவிஷா

Jul 3, 2023

உப்பை விட மிகச்சிறிய பை ஒன்று ஆன்லைனில் 51 லட்சத்திற்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
உப்பு கல்லை விட மிக சிறிய அளவிலான பை ஆன்லைன் ஏலத்தில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஃப்ளோரசண்ட் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள இந்த மைக்ரோஸ்கோபிக் பையை லூயின் உய்ட்டன் என்ற பேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பையின் அளவே வெறும் 0.03 அங்குலத்திற்கு குறைவு. இந்தப் பையை வாங்கியவருக்கு அதை பார்க்கக் கூடிய வகையில் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோஸ்கோப் வழங்கப்பட்டுள்ளது. கல் உப்பை விட சிறிய அளவிலான இந்த பை ஆன்லைனில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.