• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாயும் ஒளி நீ எனக்கு திரைப்பட விமர்சனம்…

Byஜெ.துரை

Jun 25, 2023

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் வாணிபோஜன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளர்.

இந்தப்படத்தில் தனஜெயன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

சராசரியான வெளிச்சத்தில் கண் பார்வை தெளிவாக தெரியாது அதிகமான வெளிச்சத்தில் மட்டுமே கண் பார்வை நன்றாக தெரியும் என்ற குறைபாடுள்ள நாயகன் விக்ரம் பிரபுக்கு அவரது சித்தப்பா ஆனந்த் தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் இருக்கிறார்.

அதனால் கண் பார்வை குறைபாடு பற்றி கவலைப்படாமல் சொந்தமான தொழில் சந்தோஷமான குடும்பம் என்று விக்ரம் பிரபு மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்க திடீரென்று அவரது சித்தப்பா ஆனந்த் கொலை செய்யப்படுகிறார்.

சித்தப்பாவின் கொலைக்கான காரணத்தை தேடும் விக்ரம் பிரபு அரசியல் ரவுடி தனஞ்ஜெயா தான் சித்தப்பாவை கொலை செய்தார் என்பதை கண்டுபிடிக்கிறார்.

அரசியல் ரவுடி தனஞ்ஜெயா விக்ரம் பிரபுவின் சித்தப்பாவை எதற்காக கொலை செய்தார் என்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை பல படங்களில் பார்த்த அதே வழக்கமான விக்ரம் பிரபு தான் என்றாலும் சண்டைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்க்கிறார். முரட்டுத்தனமான வேடத்திற்கு பொருத்தமானவராகவும் தெரிகிறார்.

அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்கும் வாணி போஜன் இந்த படத்திலும் அப்படிப்பட்ட ஒரு வேடத்தில் தான் நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டாலி தனஞ்ஜெயா வழக்கமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய கொடூர மனம் படைத்தவர் வேடத்திற்கு சரியாக பொருந்துவதோடு நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.

ரெகுலர் நண்பன் வேடத்தில் விவேக் பிரசன்னா பாசமிக்க சித்தப்பாவாக ஆனந்த் மக்களுக்கு உதவி செய்யும் அரசியல் தாதாவாக வரும் வேலா ராமமூர்த்தி பல படங்களில் பார்த்து பழகிய வேடங்கள் தான் இப்படத்திலும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது நாயகனின் குறைபாட்டை காட்சிகள் மூலம் வெளிப்படுத்துவதோடு அவருடைய பார்வை குறைபாடு எப்படி இருக்கும் என்பதை படம் பார்ப்பவர்களும் உணரும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் பெரும்பாலான சண்டைக்காட்சிகள் குறைவான வெளிச்சத்தில் படமாக்கப்பட்டாலும் மிக நேர்த்தியாக இருக்கிறது. சண்டைப்பயிற்சி இயக்குநர் தினேஷ் காசியின் உழைப்பு பாராட்டும்படி இருக்கிறது.

படம் முழுவதும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிப்பதோடு ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வேகமாகவும் வித்தியாசமாகவும் காட்சிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.

சாகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

அழுத்தம் இல்லாத திரைக்கதையை வேகமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரேம் குமார்.

யூகிக்கும்படியான காட்சிகள் மற்றும் அழுத்தமில்லாத கதபாத்திர வடிவமைப்புகளோடு கதாநாயகனுக்கு ஏற்படும் பிரச்சனைக்கான காரணம் பலம் இல்லாமல் இருப்பது படத்தின் மைனஸ் நாயகனின் குறைபாடு ஒளிப்பதிவு மற்றும் சண்டைக்காட்சிகள் மீது கவனம் செலுத்திய இயக்குநர் கார்த்திக் அத்வைத் திரைக்கதை மீது ஏன் கவனம் செலுத்தவில்லை என்பது புரியாத புதிர்.

மொத்தத்தில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ஒளியும் இல்லை ஒசையும் இல்லை.