• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யோகா விழிப்புணர்வு பேரணி

Byஜெ.துரை

Jun 19, 2023

வருகின்ற ஜூன் 21ஆம் தேதி சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு பதஞ்சலி யோகா மையம் சார்பாக சென்னை கேகே நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் இருந்து யோகா விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகன அணி வகுப்புடன் கூடிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சென்னை கேகே நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் பதஞ்சலி என்னும் யோகா மையம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தினமும் காலை இலவசமாக கற்று கொடுக்க பட்டு வருகிறது

இந்த யோகா மையத்தில் உள்ள குழுவினர் ஒன்றினைந்து யோகா விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகன அணிவகுப்புடன் சிவன் பூங்காவில் இருந்து அசோக்நகர் ஆஞ்சநேயர் கோயில் வரை சென்றனர்

இந்த அணிவகுப்பில் யோகா செய்வோம், நோயில்லாமல் வாழ்வோம், மதுவை ஒழிப்போம், மரம் வளர்ப்போம், உணவே மருந்து, போன்ற வாசகங்கள் எழுதிய பதகைகளை கையில் ஏந்தியபடி அணிவகுத்து சென்றனர் இந்த விழிப்புணர்வு பேரணியில் மையத்தின் தலைவர் இராமசந்திரன் சிறப்பு விருந்தினராக ரித்தேவ்ஜி(யுவா பிர் பாரி), மற்றும் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இந்த அணி வகுப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது