• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மத்திய சிறையில் வாலிபர் மர்ம சாவு..,உறவினர்கள் சாலை மறியல்..!

Byஜெபராஜ்

Jun 15, 2023

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மது விற்ற வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர் மர்ம சாவால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
புளியங்குடி பேருந்து நிலையம் முன்புள்ள நடுசோவாழன் தெருவை சேர்ந்தவர் முப்புரி மாடத்தி ( 60) இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இவர் பல ஆண்டுகளாக பெட்டிக்கடையில் வைத்து மதுப்பாட்டுகள் விற்பனை செய்ததர்காக இவர்மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் தற்போது புளியங்குடி நடுக்கருப்பழகு தெருவை சேர்ந்த மாடசாமி மகன் தங்கசாமி (26) மொத்தமாக 50 மது பாட்டில்களை வாங்கி முப்புலிமாடத்தியிடம் கொடுத்துள்ளார் அதை வைத்து முப்புலிமாடத்தி விற்பனை செய்து உள்ளார். அதனால் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் தலைமையில் போலீசார் முப்பலிமாடத்தையும் தங்கசாமியையும் கடந்த 12ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த தங்கசாமி நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் உடனே சிறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் தங்கசாமியை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து பாளையங்கோட்டை பெருமாள் புரம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். தங்கசாமி இறந்த செய்தி தெரிந்ததும் தங்கசாமி உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பு இரவு 8:15 மணிக்கு சாலை மறியல் ஈடுபட்டனர்.

உடனே சம்பவ இடத்திற்கு 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர் அப்போது புளியங்குடி பொறுப்பு டிஎஸ்பி சுதீர் மற்றும் தென்காசி எஸ்பி சாம்சங் கடையநல்லூர் தாசில்தார் கங்கா தேவி கோட்டாட்சியர் கங்கா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் தங்கசாமி குடும்பத்தினர் இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எங்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்ததை ஒட்டி அனைவரும் இரவு 11 மணிக்கு கலைந்து சென்றனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்றுப்பாதையில் வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். அசம்பாவிதம் நடக்கக்கூடாது என அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் பகுதியில் பரபரப்பாக உள்ளது.