• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!

ByA.Tamilselvan

Jun 9, 2023

வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் பலநூறுகோடிக்கணக்கான மக்கள் தினசரி அத்தியாவசிய தேவையாக பயன்படுத்தி வரும் மெட்ட நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் அவ்வபோது புதுப்புது அப்டேட்கள் வருவது வழக்கம்.
அந்த வரிசையில் ஸ்கைப் (Skype), கூகுள் மீட் (Google Meet), ஜூம் (Zoom) வீடியோ காலிங் ஆப்ஸ்களில் (Video Calling Apps) உள்ளிட்ட செயலிகள் போல வாட்ஸ் அப் நிறுவனமும் விரைவில் ஸ்க்ரீன் ஷேரிங் அம்சத்தை கொண்டு வரவுள்ளது. ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் என்பது, ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் (Video Conference) மூலம் இணைக்கப்பட்டிருக்கும் போது, அதை ஹோஸ்ட் (Host) செய்யும் நபரோ அல்லது வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீனையோ அல்லது லேப்டாப் ஸ்கிரீனையோ அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.
பெரும்பாலும் ஐடி துறை ஊழியர்களுக்கு இந்த ஸ்க்ரீன் ஷேரிங் வசதி மிகவும் அவசியமான ஒரு அம்சம் என்றே சொல்லலாம். அதற்கான முதல்கட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இப்போது, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (WhatsApp beta) சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அம்சம் வந்தால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வீடியோ கால் மூலம் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் உடன் போசும்போது, அவர்களது போனின் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும். அதேபோல், வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வந்த உடன் நீங்கள் வீடியோ கால் செய்யும்போது, கீழே மைக் (Mic), வீடியோ ஹைட் (Video Hide), டிஸ்கனெக்ட் (Disconnect) ஆகிய டேப்களுக்கு இடையே ஸ்கிரீன் ஷேரிங் டேப் இடம்பெற்று இருக்கும். அதை கிளிக் செய்த உடன் உங்களது போனின் ஸ்கிரீன் அனைவருக்கும் தெரியும்படி டெலிகாஸ்ட் செய்யப்படும். அதன் பின்பு மீண்டும் அதே ஸ்கிரீன் ஷேரிங் டேப்பை கிளிக் செய்தால், உங்களது ஸ்கிரீன் அவர்களுக்கு தெரியாது.