• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் -சசிகலா ஜூன் 7ல் சந்திப்பு?

ByA.Tamilselvan

May 29, 2023

தஞ்சாவூரில் வரும், 7ம் தேதி நடக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில், பன்னீர்செல்வமும், சசிகலாவும் சந்தித்துப் பேசலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் இருந்து வருகிறார்.ஆனால் அதிமுக தற்போது 4 அணிகளாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே தினகரனை ஓபிஎஸ் சந்தித்த நிலையில் தற்போது திருமணவிழா ஒன்றில் ஓபிஎஸ்-சசகலா சந்தித்துப்பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் சண்முகபிரபு – யாழினி திருமண விழா ஜூன், 7ல் தஞ்சாவூரில் நடைபெறுகிறது; பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார்.இந்நிகழ்வில் தான் ஓபிஎஸ்-சசிகலா சந்தித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.