• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆளுநர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

ByKalamegam Viswanathan

May 29, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இருபாலர் பயிலும் பள்ளியாக உள்ளது. இப்பள்ளியின் தாளாளராக செந்தில்குமார் இருந்து வருகிறார். பள்ளி மாணவர்கள் கல்வியிலும் தனித் திறன் போட்டியிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டு பரிசுகளையும் கோப்பைகளையும் பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி அனிஷா பாத்திமா இளைய ஜூம்மா நடன பயிற்சியாளராகவும், ஆறாம் வகுப்பு மாணவர் முகமது ஜாபர் இளைய மேஜிசியன் ஆகவும் வெற்றி பெற்று மேதகு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பள்ளித் தாளாளர் பள்ளி முதல்வர், பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.