மதுரை.சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து அரசு பேருந்துகளை.சிறை பிடித்து கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலமடையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து கிராம பொதுமக்கள் அனைவரும் விக்கிரமங்கலம் மேலக் கால் சாலையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் மர்ம நபர்கள் சிலர் அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி ஓடியதால் அந்த பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகளை சிறை பிடித்து கிராம பொதுமக்கள் சாலையின் நடுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்தில் பயணம் செய்தபொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர் சம்பவம் கேள்விப்பட்டு வந்த சோழவந்தான் காவல் துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மின்சாரத்துறை அலுவலர்கள் உடனடியாக வரவேண்டும் எங்கள் கிராமத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என நள்ளிரவு வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் செய்வதறியாத திகைத்த போலீசார் மின்சார துறை அலுவலர்களை போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தனர் அங்கு வந்த மின்துறை அலுவலர் குடிபோதையில் இருந்தது கண்டு பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர் அதனை தொடர்ந்து மின்சார துறை அலுவலரையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் தொடர்ச்சியாக கிராமத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் ஆகையால் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் அதிகாரிகளை ஊருக்குள் விடமாட்டோம் என்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர் இரவு 9 மணிக்கு தொடங்கிய முற்றுகை போராட்டம் நள்ளிரவு 11 வரை நீடித்ததால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்..





