• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தாய் கண்டித்த விரக்தியில் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை

ByA.Tamilselvan

May 25, 2023

சென்னை ஆவடியில் தாய் கண்டித்த விரக்தியில் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட சோகசம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு இரண்டாவது தளத்தில் பாலாஜி என்பவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவரது மனைவியான மலர் மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். மருத்துவ தம்பதியான இவர்களுக்கு லோக்நாத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் சிறுவன் லோக்நாத் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 483 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் பல கனவுகளுடன் 11ம் வகுப்பு படிக்கயிருந்ததாக கூறப்படுகிறது.
சொந்த ஊரான திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வசித்து வந்த இந்த தம்பதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆவடியில் குடியேறியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்தபடி மலர் தனது மகன் லோக்நாதை செல்போனில் தொடர்புகொண்டு தனது பெயரில் கிரெடிட் கார்டு வீடிற்கு வரவிருப்பதாகவும் அதனை வாங்கி வைக்குமாறும் கூறியுள்ளார். அதற்கு போனில் சேரி அம்மா என்று சிறுவன் கூறியுள்ளர்.
கூறியப்படியே கொரியரில் கிரெடிட் கார்டு வந்துள்ளது. ஆனால் இந்த நேரத்தில் வீடு பூட்டப்பட்டிருந்தது டெலிவரி ஊழியர் மருத்துவர் மலருக்கு அழைத்து வீட்டில் யாரும் இல்லை என கூறியுள்ளார். உடனடியாக சிறுவனை தொடர்பு கொண்டு மலர், எங்கே இருக்கிறாய் என கேட்டு கோவமாக திட்டியுள்ளார்.
கிரெடிட் கார்டு சம்பவத்தில் மகன் மீது கோபமாக இருந்த படியே வீட்டிற்கு வந்த மலர் தனது மகனை கண்டிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அம்மா திட்டியதில் விரக்தியடைந்த சிறுவன் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தான் வசிக்கும் இரண்டாம் தளத்தில் இருந்து 14ஆம் தளத்திற்கு மீன்துக்கி மூலமாக சென்றுள்ளான், அப்போது எதனையும் யோசிக்காமல் 14ம் மாடியில் இருந்து கிளே குதித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 14ம் மாடியில் இருந்து சிறுவன் கிழை குதிக்கும் சி.சி.டி.வி வீடியோ காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது.
மாடியில் இருந்து குதித்து கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் கதறி அழுதது அங்கு இருந்தவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகியது, தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதற்காக தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று சிறுவன் உயிரை விட்ட சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தை உருகுலைத்துள்ளது.