• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வங்கி ஊழியர்களே தனது வங்கி சேமிப்பு பணத்தை கையாடல் செய்ததாக புகார்

Byஜெ.துரை

May 18, 2023

திருப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே துணை காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆக்சிஸ் வங்கிக் கணக்கில் போலியான கையொப்பமிட்டு வங்கி ஊழியர்களே தனது வங்கி சேமிப்பு பணத்தை கையாடல் செய்துள்ளதாக பேட்டி
இதுகுறித்து சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசியவர் ரயில்வே துணை காவல் ஆய்வாளராக பணிபுரிந்ததாகவும் அங்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் தனக்கு ஓய்வூதியமாக கிடைத்த பணத்தில் 2.5 லட்சத்தை தான் கடனாக பெற்ற கடனை அடைப்பதற்காக செலுத்தியதாகவும், ஆனால் திருப்பூரில் உள்ள ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் தான் கடனை திருப்பி செலுத்திய போதும் மீண்டும் தனது வங்கி கணக்கில் இருந்து ஊழியர்களே தனது கையெழுத்தை போலியாக கையப்போமிட்டு பணத்தை எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.


இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகள் காவல் ஆணையர்கள், முதல்வர் தனி பிரிவு என அனைத்து இடங்களிலும் புகார் அளித்தும் 2.5 ஆண்டுகளாக எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டியவர். தொடர்ந்து தனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் டிஜிபி அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்ட ஈடுபட உள்ளதாக கூறினார். காவல் உதவி ஆய்வாளராக இருந்த தனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என கூறினார்