• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம்

காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயம் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் தாக்குதல் நடைபெறுவது வழக்கம் தான்,இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியைச் சேர்ந்த விஜய நிர்மலா 51 என்பவரை காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்