• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெரியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30-ம் ஆண்டு திருவிழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கொட்டும் மழையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் முப்பதாம் ஆண்டு திருவிழா மற்றும் 22 ஆம் ஆண்டு பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய திருவிழா இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை வரை பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருக்கோவிலில் நடைபெற்றது 28-4-2023 வெள்ளிக்கிழமை காலை 9:30மணி முதல் 10:30 மணி வரை கணபதி ஹோமம் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை கொடியேற்றுதல் 29-4-2023 சனிக்கிழமை காலை ஏழு முப்பது மணி முதல் எட்டு முப்பது மணி வரை பாலாபிஷேகம் 30ஃ4ஃ2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு முப்பது மணி முதல் 6:30 மணி வரை கரிய மலைப்பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவிலிலிருந்து கரகம்பாலித்தல் நடைபெற்றது. மே 1 ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை மாவிளக்கெடுத்தல் பக்த கொடிகளுக்கு அன்னதான வழங்கப்பட்டது அதை தொடர்ந்து பக்தர்கள் பூ குண்டம் பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் இறங்கினார்கள.; ரெண்டு அஞ்சு 2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏழு முப்பது மணி முதல் மஞ்சள் நீராட்டுதல், வழுக்கு மரம் ஏறுதல் கலை நிகழ்ச்சிகள் போன்றவை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 22 ஆம் ஆண்டு பூ குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.