மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் திருமங்கலம் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளின் கடந்த சில தினங்களாக அதிமுக உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமங்கலம் ஒன்றியம் கீழே உரப்பனூரில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு பேசிய அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தால் கிளைசெயலர் கூட முக்கிய பதவிக்கு வர இயலும் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் 35 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து ஜெயலலிதா காலத்தில் ஒன்றை கோடியாக மாற்றினார். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டரை கோடி உறுப்பினர்களை இணைக்கும் படி உத்தரவிட்டு செயலாற்றி வருகிறார் புதிய வாக்காளர்களையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவர் கூட்டத்தில் பேசினார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்..!
