• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தெப்பக்காட்டில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

2018யில் சமயபுரம் கோவிலில் பாகனை கொன்ற மசினி யானை,பராமரிப்புக்காக முதுமலை கொண்டுவரப்பட்ட நிலையில் தெப்பக்காட்டில் மசினி யானை தாக்கி இன்று காலை பாகன் உயிரிழப்பு .
காலை உணவு கொடுக்கும்போது வளர்ப்பு யானை மசினி தாக்கியதில் பாலன் என்ற பாகன் உயிரிழந்தார்… பாகன்களை கொன்ற யானையை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டது .


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு பகுதியில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கிய போது சி எம் பாலன் 50 என்ற யானை பாகனை மசினி என்ற வளர்ப்பு யானை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில் பாலன் இறந்துவிட்டார். இது குறித்து முதுமலை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பாலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சமயபுரம் கோவிலில் மசின யானை பாகனை தாக்கிக் கொன்றது .இதனைத் தொடர்ந்து அந்த யானையை முதுமலைக்கு அழைத்து வந்து அதை பாலன் என்ற யானை பாகன் பராமரித்து வந்தார் .இந்நிலையில் இன்று காலை பாகனை இந்த யானை தாக்கிக் கொன்றதால் கும்கி யானைகள் உதவியுடன் இந்த யானையை பிடித்து தனிமையில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.