• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு..!!

ByA.Tamilselvan

Apr 26, 2023

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தது. இதற்கான முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் தேர்வு முடிவுகளை வேறு தேதியில் அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வருகிற மே மாதம் 8ம் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 ரிசல்ட் வெளியிடப்படும். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in / www.dge1.tn.nic.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.dge2.tn.nic.in / www.dge.tn.gov.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் வழங்கிய கைப்பேசி எண்ணிலும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும்.