• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 24, 2023

சிந்தனைத்துளிகள்

பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்.
யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.
யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு.
யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு.
சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்.

உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்.
உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்.
உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்.
ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்.
எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கு அருகில் இருக்கட்டும்.
இயற்கையும், இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.