• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

ByKalamegam Viswanathan

Apr 21, 2023

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அரசு பேருந்து ஓட்டுனர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பிறகு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பொழுது திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் விஜயராகவன் வயது 40 திருப்பரங்குன்றம் காவல் நிலையம் அருகே ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார் மதியம் 1:30 மணி அளவில் உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு உணவு அருந்துவதற்காக அவரது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மீது நேரடியாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..