• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை சோழவந்தான் ராயபுரம் புனித ஜெர்மேனம்மால் ஆலய திருவிழா

ByKalamegam Viswanathan

Apr 16, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொடியேற்றத்தில் ராயபுரம் திருமால் நத்தம் ரிஷபம் நகரி நெடுங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து ஜெர்மேனம்மால் கொடியேற்றத்தில் பங்கு பெற்றனர் இதை தொடர்ந்து திருப்பலி மறையுறை நடைபெற்றது தினசரி கொடிபவனி ஜெபமாலை திருப்பணி நடைபெறும் வருகிற 22ஆம் தேதி இரவு திருவிழா திருப்பலி தேர்ப்பவனி கருணை ஆசீர் நடைபெறுகிறது 23ஆம் தேதி புது நன்மை விழா மற்றும் சப்பரத் திருவிழா தேர் பவனி நடைபெறும் 24 ஆம் தேதி நன்றி திருப்பலி நடைபெற்று கொடி இறக்கம் நடைபெறும் விழா ஏற்பாடுகளை ராயபுரம் ஜெர்மேனம்மாள் ஆலய பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்..