• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சியர் .காவல் ஆணையாளர். விளையாட்டுத் துறையினர் மரியாதை

நாடு முழுவதும் சட்ட மாமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலத்தில் தொங்கும் பூங்கா அருகே அமைந்துள்ள அவரது அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

. தொடர்ந்து ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் அவர்கள் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு தொங்கும் பூங்கா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மரியாதை செலுத்த ஏதுவாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து நிகழ்வுகளும் காவல்துறை சார்பில் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.